நிகழ்கால எழுத்தின் குரல் | நூல் வெளி

நிகழ்கால எழுத்தின் குரல் | நூல் வெளி
Updated on
1 min read

மே​னாள் கல்வி அமைச்​சர், வைகைச்​செல்​வன் ஓர் அரசி​யல்​வாதி மட்​டுமல்ல, சொற்​பொழி​வாளர், கவிஞர் எனவும் அறியப்​படு​பவர். தமிழ் இதழ்​களில் அவர் எழு​திவரும் கட்​டுரைகளில் பரந்த வாசிப்​பனுபவத்​தை​ அறிய​லாம். ‘ஒரு நூற்​றாண்​டின் தவம்’ என்ற இந்​நூலில், 2019லிருந்து 2024 முடிய ஐந்​தாண்​டு​களில் அவர் எழு​திய கட்​டுரைகளில் அனுபவங்​களின் சார​மும், வருங்​காலத்​திற்​கான சிந்​தனை​களும் வெளிப்​பட்​டுள்​ளதே அதற்கு சான்​று.

தமிழர்​களின் வீர​விளை​யாட்​டான ஜல்​லிக்​கட்​டிலிருந்து இந்​நூல் தொடங்​கு​கிறது. தேர்​தல் ஆணை​யத்​தின் செயல்​பாடு​களைப் பற்றி ‘இந்​தி​யத் தேர்​தல் கடந்​து​ வந்த பாதை’, சூழலியல் குறித்து ‘பூமி​யில் எரி​யும் ஆபத்​து’, பொருளா​தா​ரத்​தைப்​பற்​றிய ‘திட்​ட​மிட்​டால் பொருளா​தா​ரம் மேம்​படும்’, மருத்​து​வக் கல்​வி​யில் உள்​ஒதுக்​கீட்​டின் அவசி​யத்​தைச் சொல்​லும் ‘மருத்​து​வப் படிப்​பு: உள்​ஒதுக்​கீடு​தான் தீர்​வு’, நவீன அறி​வியல் தொழில்​நுட்​பத்​தைப்​ பற்​றிய ‘இணை​ய​வழி​தான் இனிமேல் வழி’, தமிழர்​களின் தொன்மை வரலாற்​றைப் பேசும் ‘நமது தாய்​மடி கீழடி: வைகை நதிக்​கரை நாகரி​கம்’, மக்​கள் மற்​றும் தொழிற்​சாலைகள் வெளி​யேற்​றும் ‘கழி​வுநீ​ரால் மாசடை​யும் ஆறுகள்’, ‘உக்​ரைன் - ரஷ்யா போரும் பின்​னணி​யும்’ என சர்​வ​தேச பார்​வை​யில் அமைந்த பல கட்​டுரைகளோடு, மத்​திய – மாநில அரசுகளின் திட்​டங்​கள் மற்​றும் செயல்​பாடு​களைப் பற்​றிய விமர்​சனப்பூர்​வ​மான கட்​டுரைகளும் இடம்​பெற்​றுள்​ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in