

ஒடியா எழுத்தாளர் பராமிதா சத்பாதி 2016இல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தன் உழைப்பினாலும், அன்பினாலும் சமூகத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறாள் பெண். ஆனால் அவளை உலகம் எவ்வாறு விளங்கிக் கொண்டது என்பதுதான் இத்தொகுப்பின் பிரதான கேள்வியாக இருக்கிறது.
இத்தொகுப்பில் உள்ள பல கதைகளிலும் பெண்ணை புரிந்துகொள்வது ஆண்களல்ல, பெண்கள்தான் என்பது மையச்சரடாக உள்ளது. உடலில் தோன்றிய வெண்புள்ளிகளால், குடும்பத்தினரும் மற்றவர்களும் விலகினாலும், பள்ளித்தோழி, முதிர்பருவ காலத்தில் வந்து தேறுதல் சொல்ல, அதில் ஆறுதல் கொள்ளும் மாயா; உறவினர்கள் பலரும் விலகிச் சென்றுவிட அடுக்ககத்து தனிமை வாழ்க்கையில், விற்பனை பிரதிநிதியான ஓர் இளம்பெண்ணின் தோழமையைப் பெறும் சுனயனா போன்ற பெண்களை வெவ்வேறு கதைகளில் பராமிதா சத்பாதி முன்னிறுத்துகிறார்.