மனித உணர்வுகளை நுட்பமாகப் பேசும் நாவல்

மனித உணர்வுகளை நுட்பமாகப் பேசும் நாவல்
Updated on: 
1 min read

பெண்​களுக்​குச் சொத்​தில் சம உரிமை இருந்​தும், அது மறுக்​கப்​படுவதை மைய​மாகக் கொண்டு எழுதப்​பட்​டுள்ள நாவல் ‘சடவு’. நேர்த்​தி​யாகக் கையாளப்​பட்​டுள்ள நெல்லை, தென்​காசி வட்​டார வழக்கு நாவலின் பலம்.

கதை நேர்க்​கோட்​டில் பயணிக்​காமல் நிகழ்​காலத்​திலும் இறந்​த காலத்திலும் பின்​னிச் செல்​வது வாசிப்​புக்​குச் சுவை சேர்க்​கிறது. மக்​கள் வாழ்​வுக்​கும் சட்​டம் தரும் உரிமை​களுக்​குமான இடைவெளியை வெளிச்சமிட்​டுக் காட்​டுவ​தால் ‘சடவு’ முக்​கியத்​து​வம் பெறுகிறது.

சிறு​வயதில் தந்தை தனக்​குத் தரு​வ​தாகச் சொன்ன 10 தென்​னம் பிள்​ளைகளை, வளர்ந்து தாயான பிறகு அண்​ணன் செண்​பகத்​திடம் கேட்​கிறாள் மல்​லிகா. மறுக்​கிற அண்​ணன், அவளை அடிக்​கவும் செய்​கிறான்.

Loading content, please wait...

X