

கன்னியாகுமரி மாவட்டத்தில், பரணமுறி என்னும் சிற்றூரில் இருந்து இலக்கிய உலகம் நோக்கி பயணப்பட்டிருக்கும் அதியமான் என்கிற சி.டேவிட் ஆல்பர்ட் குமாரின் இரண்டாவது நாவல் இது.
முதல் நாவல் ‘அருஞ்சுரம்’, அயல்நாட்டு மோகத்தால், ஈசலைப்போல சவுதி அரேபியா முதலான வளைகுடா நாடுகளுக்குச் சென்று வாழ்க்கையை தொலைத்த இளைஞர்களைப் பற்றியது.
‘தேறல்’ நாவலும் இன்றைய இளைஞர்களை சீரழிக்கும் குடிப்பழக்கத்தின் கொடுமையை விவரிக்கிறது. ‘தேறல்’ என்பது சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் மதுவை குறிக்கும் சொல்லாகும். நம் நாட்டில் உயர் ரக வெளிநாட்டு மது வகைகளை செல்வந்தர்கள் தாம் நடத்தும் விருந்து வைபவங்களில் தாராளமாக பரிமாறுகிறார்கள்.