இலக்கியம்
மேன்ஷன் வாழ்வின் வெக்கை | நூல் நயம்
விரிந்து கொண்டே செல்கிற சென்னையின் ஆரம்ப கால அடையாளங்களில் திருவல்லிக்கேணி மேன்ஷன்களுக்கு தனியிடம் உண்டு. இப்போது அவை கொஞ்சம் மேலதிக வசதிகளுடன் இருக்கின்றன. சென்னைக்கு இளம் வயதில் வேலை தேடி வந்திருக்கும் பலருக்கு மேன்ஷன் பழகியிருக்கும்.
அந்த சிங்கிள் அறைகளில், சிறிய கட்டில்களில், அருகில் கடற்கரை இருந்தாலும் வெப்பக் காற்றை மட்டுமே அள்ளித் தரும் ஃபேன்களுக்கு கீழே வாழ்தல், விவரிக்க முடியாத அனுபவம்.
