

திருவாரூர் வட்டாரத்தைப் பூர்விகமாகக் கொண்ட கௌதமன் தாம்பரத்தில் வசிக்கிறான். தகவல்தொழில்நுட்ப நிறுவன வேலை, மனைவி, குழந்தைகள், வீடு எல்லாமே அவன் விரும்பியபடி அமைந்திருந்தாலும், ஓர் ஏக்கம் அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது.
நகரத்து வாழ்க்கை அவனுக்கு இடைக்கால ஏற்பாடு போலவே தோன்றுகிறது. சொந்த ஊரில் நிலைகொள்ளவே அவன் மனம் துடிக்கிறது.
சிந்தனைரீதியாகக் கிராமத்துக்கும் நகரத்துக்குமாக நீந்திக்கொண்டே இருக்கும் கௌதமன், எந்தக் கரையில் ஏறுகிறான் என்பதை ‘மனக்கரை’ புதினம் ஒரு சுயசரிதையின் சாயலோடு விவரிக்கிறது.