

மலையக மக்களும் ஈழத் தமிழரும் ஒன்றா, பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த அன்றைய சிலோனுக்கு இந்தியாவில் இருந்து தமிழர்கள் ஏன் சென்றார்கள், அங்கே அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகள் என்னென்ன, இருநாட்டு அரசியல் தலைவர்களும் அவர்களை எப்படிப் பந்தாடினார்கள், ஏன் அவர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறும் வகையில் அமைந்துள்ளது ‘மலையகமும் மறுவாழ்வும்’ என்ற இந்த நூல்.
ஐந்து பேர் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், பேசப்பட வேண்டிய அரசியலைக் கச்சிதமாக எடுத்துரைக்கிறது.
இலங்கை முழுவதும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் வந்த பிறகு அங்கே லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட காபித் தோட்டங்களில் குறைவான கூலிக்கு வேலைசெய்ய தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் ஏமாற்று வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்டனர்.