பெண்ணுடல்களின் துயரக் கதைகள் | நூல் வெளி

பெண்ணுடல்களின் துயரக் கதைகள் | நூல் வெளி
Updated on
2 min read

சமூகப் பணி​யாள​ரும் எழுத்​தாள​ரு​மான அமுதா செல்வி எழு​தி​யுள்ள ‘மை​யிருளி’ நாவல், இது​வரை பேசாப்​பொருளாகக் கற்​பிதம் செய்​யப்​பட்​டுள்ள பாலியல் தொழிலில் ஈடு​பட்​டுள்ள பெண்​ணுடல்​களின் துயரக் கதைகளைப் பேசுகிறது.

குடும்ப உறவில் காலங்​கால​மாக நில​வு​கிற பெண் பற்​றிய விழு​மி​யங்​களைப் புறக்​கணித்​துப் பெண்​களை வெற்​றுடல்​களாக அணுகி வதைக்​குள்​ளாக்​கு​கிற ஆண்​களின் மறு​பக்​கம் பற்​றியகதை​யாடல், நாவலின் மைய​மாகும்.

விலைமகளி​ரான பெண்​களை முன்​வைத்​துத் தமிழில் இது​வரை எழுதப்​பட்ட புனை​வு​களில் இருந்து மாறு​பட்டு நாவலாசிரியர் அமுதா விவரித்​துள்ள கதைகள், பெண்​கள் காலந்​தோறும் எதிர்​கொள்​கின்ற வலிகளை அழுத்​த​மாக விவரிக்​கின்​றன.

சமூகப் பணிக் கல்​லூரி மாண​வி​யான செம்​மலர், கள ஆய்​வுக்​காகத் தரு​மபுரி​யிலுள்ள பாலியல் தொழிலில் ஈடு​பட்​டுள்ள பெண்​களின் மறு​வாழ்வு மையத்​துக்​குச் செல்​கின்​றார். அப்​பொழுது அவர் சந்​திக்​கின்ற பதினெட்டு வயதான சைலஜா என்ற பாலியல் தொழிலாளி சொல்​கின்ற நான்​காண்டு கசப்​பான அனுபவங்​கள், முடிவற்ற கதைகளாக விரி​கின்​றன.

நாவலின் மைய​மாக சைலஜா இருந்​தா​லும் பாலியல் தொழிலில் ஈடு​பட்​டுள்ள பல்​வேறு பெண்​களின் அவல​மான கதைகள் முதன்​மை​யாக உள்​ளன. கர்​நாட​கா​விலுள்ள கிராமத்​தில் பிறந்த கெங்​கம்மா சிறுமி​யாக இருக்​கும்​போது கோவிலுக்கு நேர்ந்து விடப்​படு​கிறாள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in