

சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என நுரைத்துப் பொங்கிய இன்பச் சுவையை நவீன கவிதைகளின் காலத்துக்கும் நீட்டிருத்திருக்கிறார் முரளி அரூபன். நகில்நலம் பாடும் 450 நேரிசை வெண்பாக்களின் தொகையாய் ‘மதன விலாசம்’ மலர்ந்துள்ளது.
தலைவன் நெஞ்சொடு கிளந்தும், எந்நாளோ என்று எக்காலம் பாடியும் போதாமல் புள்ளினங்களையும் தூது விடுகிறான். தலைவி, தோழன்(?), தோழி, செவிலி, கவிக் கூற்றுகளாகவும் இடஞ்சுட்டி பொருள்விளக்கம் தொடர்கிறது. உவமை உருவகங்களோடு ஒருபொருட்பன்மொழிக்குத் தோள்களும் துணைக்கு வருகின்றன.