

‘எழுத்து’ இலக்கியப் பரிசு: ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு சார்பில், சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ.2 லட்சம் பெறுவதற்கான நாவல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கதையம்சம் நிறைந்த, நிகழ்கால சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கின்ற, நவீனத்துவம் நிறைந்த இதுவரை வெளிவராத புதிய படைப்புகளின் கணினி அச்சு செய்யப்பட்ட மூன்று பிரதிகளை (200 முதல் 250 பக்கங்கள் வரை) ஜூன் 30க்குள் ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு, 3சி – எல்டோராடோ, 112ஏ, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொடர்புக்கு: 9486361884, 9841440410.