

இன்றைய இயந்திரத்தனமான துரித வாழ்க்கையும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் மனிதனின் உடல் மற்றும் மனநலனைத் தீவிரமாகப் பாதித்து வருகின்றன.
எந்தவொரு சிறிய உடல் பிரச்சினைக்கும் உடனே ரசாயன மருந்துகளையும் பக்கவிளைவுகளைத் தரும் வலி நிவாரணிகளையும் நாடும் அவல நிலைக்குச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், நமது பாரம்பரிய மரபு மற்றும் உடலியல் தத்துவத்தின் அடிப்படையில் உருவான யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளின் சிறப்புகளை எளிய முறையில் விளக்குகிறது டாக்டர் ஒய்.தீபா எழுதிய ‘உடலே மருத்துவர்’ எனும் இந்த நூல்.