ஒரு புதிய சமூகத்​தின் சமிக்ஞை

ஒரு புதிய சமூகத்​தின்  சமிக்ஞை
Updated on
1 min read

சமீப காலங்​களில் தெலுங்கு இலக்​கி​யங்​கள் தமிழுக்கு உடனுக்​குடன் மொழிபெயர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. அவ்​வகை​யில், திரா​விடப் பல்​கலைக்​கழகப் பேராசிரியர் த.விஷ்ணுகு​மாரன், தெலுங்கு இலக்​கி​யத்​தின் சமகால எழுத்​தாளர் குப்​பிலி பத்​மா​வின் தேர்ந்​தெடுத்த சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்​திருக்​கிறார்.

குப்​பிலி பத்​மா​வின் கதைகள் நவீன யுகத்​தின் பெண்​ணி​யத்​தைப் பேசுபவை. பாலினச் சமமின்​மையி​லிருந்து தன் எழுத்தை அவர் கட்​டமைத்​திருக்​கிறார். ஆண்​களின் தடித்​தனம்​தான் அவர் கதைகளின் மைய​மாகச் செயல்​படு​கிறது.

அழுது வடி​யும் பெண்​களை இவர் தம் கதைகளுக்​குப் பயன்​படுத்​த​வில்​லை. தன்னை மிதித்​தவர்​களின் மத்​தி​யில் நிமிர்ந்து நிற்​கும் நம்​பிக்​கை​யான பெண்​களைக் குப்​பிலி பத்மா திட்​ட​மிட்டு உரு​வாக்​கி​யிருக்​கிறார் என்று தோன்​றுகிறது.

குடும்​பம் என்ற அமைப்​பிற்​குள் பெண்​கள் வெவ்​வேறு வடிவங்​களில் சுரண்​டப்​படு​வதை இவர் பல கதைகளின் வழி​யாக உரை​யாடலை முன்​னெடுத்​திருக்​கிறார். இத்​தொகுப்​பின் முதல் கதை​யான ‘முக்​தா’ கதை​யில், முக்​தா​விற்​குத் திரு​மணம் நடை​பெற​வில்​லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in