

குழந்தைகளுக்கான காபி டேபிள் புத்தகம். இந்நூலில், ராமாயணக் கதையின் கும்பகர்ணன் வதைப்படலம் தெருக்கூத்து நிகழ்வின் சித்திரங்களாக உயிர்பெற்றுள்ளன. பக்கங்கள் தோறும் நம் கண்கள் காண்பதெல்லாம் வண்ணவண்ண ஓவியங்கள்; கதாபாத்திரங்களின் “தஜ்ஜோம் தக ஜோம் தகி தோம் தத்ளாங்கு தகு...” போன்ற தாளகதி ஓசைகளுடனான ஆட்டங்கள், பாடல்கள்; வசனங்களில் தெறிக்கும் நகைச்சுவை இழையோடும் வார்த்தைகள். அனைத்தும் நம்மை வசீகரிக்கின்றன.
ஆறு மாதம் தூக்கம், ஆறு மாதம் விழிப்பு என்ற சாபத்தால் உறக்கத்தில் இருந்த கும்பகர்ணனை எழுப்பி அண்ணன் ராவணனிடம் அழைத்து வருகிறார்கள்.