

தமிழில் 1994இல் தொடங்கப்பட்டது ‘குதிரை வீரன் பயணம்’. இது வரை மொத்தம் 10 இதழ்கள் வெளிவந்துள்ளன. இவற்றிலிருந்து, 1) கவிதைகள்,2) சிறுகதைகள், 3) கட்டுரைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள் ஆகியன தொகுக்கப்பட்டு தற்போது மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன.
கவிதைகளைப் பொறுத்தவரை பசுவய்யா, தஞ்சை பிரகாஷ், சி.மோகன், இளமுருகு, விக்ரமாதித்யன், பிரம்மராஜன், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், பாதசாரி, குவளைக்கண்ணன், கோபிகிருஷ்ணன், எஸ்.சுகந்தி சுப்பிரமணியன், பிரான்சிஸ் கிருபா, கடற்கரய் உள்ளிட்டோரின் கவிதைகள் 90களுக்கே உண்டான சீரான தரத்தில் காணமுடிகின்றன.
சிறுகதைகளில் அஜயன் பாலா, பெருமாள் முருகன், கோணங்கி, கோபிகிருஷ்ணன், கூத்தலிங்கம் கதைகளும், மொழிபெயர்ப்புக் கதைகளாக வைக்கம் முகம்மது பஷீர் (யூமா வாசுகி மொழிபெயர்ப்பில்), சக்காரியா (சா.தேவதாஸ்) போர்ஹே, கொர்த்தஸார் (நாகார்ஜூன்), இடானோ கால்வினோ(எஸ்.சண்முகம்). யூ நகிபீன் (க.சுப்பிரமணியம்), கெஸ ஸாத் (யூமா வாசுகி) ஆகியோரின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. சிற்சில நாவல் அத்தியாயங்களும் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளன.