

உலக சினிமாவின் உன்னதக் கலைஞர்களில் ஒருவர் கீஸ்லோவ்ஸ்கி. அவரைப் பற்றிய தெள்ளிய அறிமுகத்தைத் தரும் இந்நூல் ‘திரையும் தத்துவமும் மனித வாழ்வின் மறைபொருள்களைத் தேடி’ என்ற உபதலைப்புடன் வெளிவந்துள்ளது.
கீவ்ஸ்லோவ்ஸ்கி வாசகர்களுடன் நேரடியாகப் பேசும் முதல் கட்டுரையை, ‘இத்தனை மழைக்குப் பிறகுதான்’ என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துக்குமார் மொழியாக்கம் செய்துள்ளார். 2001இல் ‘நிழல்’ முதல் இதழில் வெளியான இக்கட்டுரையை சிற்றிதழ் வாசகர்கள் படித்திருக்கக் கூடும்.
தனது தாய்நாடான போலந்து மீது கீவ்ஸ்லோவ்ஸ்கி கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. இரண்டாம் உலகப்போரில் மிகுந்த பாதிப்புகளைச் சந்தித்த போலந்து, தன்னை எப்படி ஒரு படைப்பாளியாக்கியது என்பதை மிக சாமானியனின் பார்வையிலிருந்து அவர் பேசியுள்ளயாவும் திரைச்சீலை வேலைப்பாடுகளின் அடர்ந்த இழைநயம் மிக்கவை.