

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் வினில் போள், கேரளத்தில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு அடிமைகளாக விற்கப்பட்ட, தப்பித்துவந்த ‘அடிமைச் சமூக’த்தைச் சேர்ந்தவர்களைப் பற்றிப் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கேரள தலித்துகளின் வரலாற்றைப் பதிவுசெய்யும் பெரும்பாலான ஆய்வாளர்கள் பிரிட்டிஷ் மிஷனரிகள், ஆவணங்களின் குறிப்புகளையொட்டியேதரவுகளைத் திரட்டியிருப்பதால் 19ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வரலாறு மட்டும்தான் பரவலாகக் காணக்கிடைப்பதாகக் குறிப்பிடுகிறார் வினில் போள்.
ஆனால், 17ஆம் நூற்றாண்டில் கேரளம் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததைத் தொடர்ந்து அடிமை முறை புழக்கத்துக்கு வந்தது என்பதை ஐரோப்பிய ஆவணங்கள், கடிதங்களின் துணையோடு நிறுவுகிறார்.