ஒரு ரட்சகனும் சில ரட்சகியரும்

ஒரு ரட்சகனும் சில ரட்சகியரும்
Updated on
2 min read

பிறக்​கும்​போது தன் தாயைப் பறி​கொடுத்​தவன் மரி​யா. அவனை மருத்​து​வர் ஆக்க வேண்​டும் என்​பது இறந்​து​போன தாய் சாராளின் கனவு. மரி​யா​வுக்​குச் சேவக​னாகவே தன் வாழ்க்​கையை அர்ப்​பணிக்​கிறான் அவனது தந்தை பெரிய​நாயகம். தந்​தை​யும் மகனும் பெங்​களூரு​வில் உள்ள ஃபிரெஞ்​சுப் பாதிரி​யார் ஆந்த்​ரே​விடம் அடைக்​கலம் புகு​கின்​றனர்.

மூன்று பேரின் கதை​யாகவோ, எண்​ணற்ற வெற்​றிக்​கதைகளில் ஒன்​றாகவோ இந்​தப் புதினம் முடிந்​திருக்​கும் சாத்​தி​யம் உண்​டு. ஆனால் ஊகிக்​கப்​படும் வரம்​பு​களுக்​குள் அடங்கி விடா​மல், கலை​டாஸ்​கோப்​பில் நிகழும் பல வண்​ணங்​களின் சங்​கமம்​போலப் பல மனிதர்​களின் வாழ்க்​கைச் சித்​திரங்​களை ‘கறுப்பு ரட்​சகன்’ உள்​ளடக்​கி​யிருக்​கிறது.

பெரும்​பான்​மை​யான பேரின் எதிர்ப்​பை​யும் மீறிப் பாலியல் தொழிலா​ளி​யின் சடலத்தை நல்​லடக்​கம் செய்​யப் போராடும் பாதிரி​யா​ராக இருக்​கிறார் ஆந்த்​ரே. சமையலுக்​காக மட்​டும் கத்தி பிடிப்​பவ​னாக அல்​லாமல், தேவைப்​பட்​டால் நீதிக்​காக​வும் ஆயுதம் ஏந்​துபவ​னாக இருக்​கிறான் பெரிய​நாயகம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in