நனவிலியில் தொடரும் விவாதங்கள் | நூல் வெளி

நனவிலியில் தொடரும் விவாதங்கள் | நூல் வெளி
Updated on
1 min read

நாவலாசிரியர் கரன் கார்க்​கி, இந்​நாவலில் வரலாற்று வலிகளை, வாழ்​வின் கடந்​து​போன துயரங்​களை உணர்ச்சி கொந்​தளிப்​பாக வைக்​கிறார். வெண்​மணி படு​கொலை, ஹிட்​லர் யூதர்​களைக் கொன்று குவித்​தது உள்​ளிட்ட தகவல்​களை மனசாட்சி உள்​ளவர்​கள் எளி​தாகக் கடந்து போய்​விட முடி​யாது என்​பதை நிறு​வுவதற்​காக தனி​யாக ஒரு கதா​பாத்​திரத்தைப் படைத்​துள்​ளார்.

கல்​லூரி​யின் முதுகலை மாணவ​னான நாயகன் சமரன், வாசிப்​பு​களின்​வழியே மனிதர்​களை​யும் உலகை​யும் புரிந்​து​கொண்​ட​வன். அவனுடைய பேராசிரியர் முரளி உலகின் தத்​து​வங்​களை எளி​தாக, அழகாக எடுத்​துச் சொல்​கிறவர்.

அரசி​யல், சமூக அறி​வுமிக்க ஆசிரியரின் உரைகளை ரசிக்​கும் சமரனே இந்​நாவலின் மையம். இந்​நாவலில் அவனது வாசிப்​பு​களின் விவரங்​கள், அறிஞர்​களின் மேற்​கோள்​கள், விவாதங்​கள், கானா பாடல்​கள், திரைப்​பாடல் வரி​கள் குறித்த விவரங்​கள் அளவுக்கு அதி​க​மாகவே கதைசொல்​லலை விஞ்சி நிற்​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in