

புனைவு எழுத்தாளர், கட்டுரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், களச்செயல்பாட்டாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர் கமலாலயன். 2026க்கான ‘இலக்கிய மெரினா விருது’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில் அவரது குறுநாவல், 2 சிறுகதைகள், 4 கட்டுரைகளுடன் ஒரு நேர்காணலும் இடம்பெற்றுள்ளன.
தான் சொல்ல வருகிற உச்ச சம்பவத்தை விளக்குகிற அவசரத்தில், அதற்குமுன் அறிமுகப்படுத்திய பாத்திரங்கள் குறித்து நம் மனங்களில் வரைந்த சித்திரங்களைப் பாதியில் விட்டுச் சென்ற உணர்வை ஊட்டுகிறது, ‘நகரப் பேருந்துகள்’ குறுநாவல்.