நூற்றாண்டு வாழ்வின் தகிக்கும் தடங்கள் | நூல் வெளி

நூற்றாண்டு வாழ்வின் தகிக்கும் தடங்கள் | நூல் வெளி
Updated on
1 min read

இந்​திய விடு​தலைப் போராட்ட வீரர், மூத்த கம்​யூனிஸ்ட் தலை​வர் ஆர்​.நல்​ல​கண்​ணு​வின் சிறை வாழ்க்கை உணர்​வுபூர்​வ​மாகப் பதி​வாகி​யுள்ள நூல் இது. இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யில் 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக தமிழ் மாநில துணைச் செய​லா​ள​ராகப் பணி​யாற்​றிய சி.மகேந்​திரன், அய்யா நல்லகண்​ணுவுடன் சேர்ந்து பயணித்த அனுபவம் மிக்​கவர்.

இந்​நூலில் நல்​ல​கண்​ணு​வின் வரலாற்​றுத் தடங்​களை அதன் ஆழம்​வரை சென்று நமக்​குக் காட்​டு​கிறார். ‘கைதி எண் 9658’ என்​பது நெல்லை சதி வழக்​கில் கைது செய்​யப்​பட்ட நல்​ல​கண்​ணுவுக்கு ஆயுள் தண்​டனை தீர்ப்​பளிக்​கப்​பட்​டு, வழங்​கப்​பட்ட எண். நல்​ல​கண்ணு சிறை செல்​வதற்கு முன்​பான போராட்​டங்​கள், அடக்​கு​முறை​கள், தலைமறைவு வாழ்க்​கை, எங்​கெங்கோ மறைந்து வாழும்​போது உணவளித்​துக் காப்​பாற்​றிய பெண்​கள், நெல்லை சதி வழக்​கில் சிக்​கிய குடும்​பங்களின் கண்​ணீர் கதைகள் என விரி​வாகப் பேசிச் செல்​கிறார் மகேந்​திரன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in