

காலம்காலமாகத் தொடர்கிற பிரச்சினைகள் மட்டுமல்லாமல், அவ்வப்போது தலைதூக்குகிற இடர்களையும் துயரங்களையும் கூட எழுத்தில் பதிவு செய்வது மிகச்சிலருக்கு மட்டுமே சாத்தியப்படும்.
அவற்றைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு, வரலாற்றின் சில பக்கங்களாக அந்த எழுத்து தென்படும். அப்படியொரு அனுபவத்தைத் தருகிறது, கவிஞர் செந்தாரகை எழுதிய பாடல்கள், கவிதைகளைத் தாங்கி நிற்கும் ‘கடந்து நிலைக்கும் காலம்’.
பொதுவுடைமை சித்தாந்தத்தை மனதில் ஏற்றிக்கொண்டு, இளமை முதல் முதுமை வரை தனது வாழ்வுப் பயணத்தில் கவிஞர் செந்தாரகை எதிர்கொண்டவை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.