உணர்வெழுச்சியை ஏற்படுத்தும் கதைகள் | நூல் நயம்

உணர்வெழுச்சியை ஏற்படுத்தும் கதைகள் | நூல் நயம்
Updated on
1 min read

“நெடிய பயணிப்​பில் நிகழும் கண்​டடைதலின் களிப்​பு, குறுகிய​தி​லும் உண்​டு” எனக் கண்​டு​கொண்ட கவிஞர் ந.பெரிய​சாமி, குறுங்​கதைகள் வாசிப்​பிலும், எழுது​வ​தி​லும் தனது கவனத்​தைக் குவித்​திருக்​கிறார்.

அதன் வெளிப்​பா​டாகக் கிடைத்​திருப்​பது​தான் ‘காற்​றுக் ​குடு​வை’ எனும் இக் கதைத்​தொகு​தி. கவிதைகள், கட்​டுரைகள், சிறார் கவிதைகள் எனத் தொடர்ந்து இயங்​கிக் கொண்டே இருப்​பவர் பெரிய​சாமி.

தொடர்​ வாசிப்​பும்​, எழுத்​துகளுமே ஓர் எழுத்​துக் கலைஞரைத் (அவர் ஆணோ, பெண்​ணோ,​ மாற்​றுப் பாலினத்​தவரோ யாரா​யினும்) தேங்​கிப்​போய் விடா​மல் உயிர்ப்​புடன் வைத்​திருக்க உதவும். பெரிய​சாமி​யின் எழுத்​துப்பயணம்​, இடையறாமல் தொடர் நீரோட்​ட​மாய்ப் பிர​வகித்​துக் கொண்​டே இருப்​பவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in