ஆவியாகிப் போகக்கூடாதவை

ஆவியாகிப் போகக்கூடாதவை
Updated on
1 min read

ஈழத்​துத் தமிழ்க் கவிஞர்​களில் தலையாய கவிஞர் சு.வில்வரத்தினம். இவரது வரிகளை, காலவெயி​லில் ஆவியாகிப் போகாதவண்ணம் தொகுத்​திருக்​கிறது விடியல் பதிப்​பகம்.

வில்​வரத்​தினத்​தின் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்​கள், மொழிபெயர்ப்பு​கள், நூல் விமர்​சனங்​கள், பிற மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்ட கவிதைகள் ஆகிய​வற்​றைக் கோத்து மாலை​யாக்​கித் தந்திருக்​கின்​றனர்.

“வாழ்க்கைக்​கும் எழுத்​துக்​கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க​ வேண்​டும் என்று நம்பிய சிந்​தனைப் பள்ளியைச் சேர்ந்​தவர்” என இவரைக் குறித்து முன்னுரை ஒன்றில் குறிப்​பிடு​கிறார் நிலாந்​தன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in