

சதா சிந்திப்பதும் சிந்திப்பவர்களை ஒருங்கிணைப்பதுமான சிறுபத்திரிகைகளின் பாதை எப்போதும் சிறப்புவழிப் பாதைதான். ‘காக்கைச் சிறகினிலே’ மார்ச் 2026 இதழ் நமது சிந்தனைகளில் புதிய கருத்துகளைப் பாய்ச்சுகிறது.
இவ்விதழில், ‘பாரதீய மொழிக் குடும்பம் எனும் மொழி அடையாள அழிப்புச் செயல்திட்டம்’ எனும் கட்டுரை மிகமுக்கியமானதாக அமைந்துள்ளது.
நாட்டின் வேறுபட்ட நிலப்பரப்புகளில் வெவ்வேறு மொழிக்குடும்பங்களின் ஆய்வுமுடிவுகளை கணக்கில் கொள்ளாமல் ஒரே மொழிகுடும்பமாக்கும் தன்னிச்சையான போக்கின் சிக்கல்களை, மொழிவரலாற்றின் தரவுகளுடன் ஒப்பிடுகிறது கோ.பாலசுப்ரமணியனின் கட்டுரை.