

நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான நாகூர் ரூமி எழுதியுள்ள ‘இசையும் இறைவனும்’ கட்டுரைத் தொகுப்பானது, இஸ்லாம் வாசகர்களோடு இறுக்கமற்ற உரையாடலை நிகழ்த்த விழைகிறது; அதில் நெடுங்காலமாக விவாதத்துக்கு உரியவையாக இருக்கும் சில குறிப்பிட்ட கருத்துகள், நடைமுறைகள் பேசப்படுகின்றன.
இந்த சீரிய முயற்சி, பொது வாசகர்களின் இறைநெறி சார்ந்த கண்ணோட்டத்தையும் விசாலப்படுத்தும் பிரதியாக இந்த நூலை ஆக்கியுள்ளது.
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இசை, இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது என்கிற வாதத்தை மறுக்கிற கட்டுரை முக்கியமானதொரு பதிவு.