சிறந்த நூல்கள் அறிமுகம்

சிறந்த நூல்கள் அறிமுகம்
Updated on
1 min read

தமிழ்நாட்டின் பெரிதும் வளர்ச்சி பெறாத மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் தருமபுரியில் அறிவுப் பரவலை புத்தக விமர்சனக் கூட்டங்கள் மூலம் சாதித்து வருகிறது தகடூர் புத்தகப் பேரவை. 2018 முதல் தருமபுரி புத்தகத் திருவிழாவை நடத்திவரும் இந்தப் பேரவை, மாவட்ட மக்களுக்கு இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2019இல் தொடங்கிய நூல் அறிமுக நிகழ்ச்சி கரோனாப் பெருந்தொற்றால் இணையவழிக்கு இடம்பெயர்ந்தது. வாரந்தோறும் ஞாயிறு இரவு 8 மணிக்கு இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் நூல் ஆசிரியர்களும் பங்கேற்கிறார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in