தாராபுரம் தந்த அறிவுக்​கொடைகள்

தாராபுரம் தந்த அறிவுக்​கொடைகள்
Updated on
2 min read

அன்​றைய கோவை மாவட்​டத்​தின் தாராபுரத்​தில் 1940இல் பிறந்த இரண்டு ஆளு​மை​கள் எஸ்​.​வி.​ராஜதுரை (எஸ்​.​வி.ஆர்​.), சு.​தி​யடோர் பாஸ்​கரன். இரு​வருமே தாம் தேர்ந்​தெடுத்​துக்​கொண்ட துறை​கள் சார்ந்து தமிழில் மிகக் காத்​திர​மான நூல்​களை எழு​தி​ய​வர்​கள்.

தாங்​கள் இயங்​கிய துறை​களில் முன்​னோடிகளாகச் செயல்​பட்​ட​வர்​கள், இயங்​கிவருபவர்​கள். சென்னை ரோஜா முத்​தையா ஆராய்ச்சி நூல​கத்​தில் ‘தா​ராபுரம் தந்த இரு அறி​வுக்​கொடை​யாளர்​கள்’ என்​கிற இரண்டு நாள் கருத்​தரங்​கம் இவர்​களு​டைய வாழ்​நாள் அறி​வுப்​பணி குறித்து கவனப்​படுத்​தும் வகை​யில் 2022இல் சிறப்​பாக நடை​பெற்​றது.

இரு​வருக்​கும் தற்​போது 86 வயது. இரு​வரும் தொடர்ந்து இயங்​கிக்​கொண்டே இருக்​கிறார்​கள். இந்​தப் பின்​னணி​யில் ‘வரலாறும் நிகழ்​கால அக்​கறை​களும்’ என்​கிற தலைப்​பில் எஸ்​.​வி.​ராஜதுரை​யின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 20 கட்​டுரை களைக் கொண்ட தொகுப்​பை​யும், ‘ஊருக்கு நூறு பேர்’ என்​கிற தலைப்​பில் சு.​தி​யடோர் பாஸ்​கரனின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 17 கட்​டுரைகள் கொண்ட தொகுப்​பை​யும் ரோஜா முத்​தையா ஆராய்ச்சி நூல​கம் வெளி​யிட்​டுள்​ளது.

ஓர் ஆசிரியரின் படைப்​பு​கள் குறித்த ஒட்​டுமொத்த சித்​திரத்தை வழங்​கும் ‘ரீடர்’ வகை நூல்​கள் தமிழில் குறைவு. முக்​கிய எழுத்​தாளர்​கள் அனை​வருக்​கும் செய்​ய​வேண்​டிய இப்​பணியை இந்த இரு​வருக்​கும் ரோஜா முத்​தையா நூல​கம் தொடங்​கி​வைத்​துள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in