

இன்றைய மதுரையின் பெரும்பாலான அடையாளங்கள் நாயக்கர் காலத்தில் உருவானவையே. கடைசியாக மன்னராட்சியின் கீழ் மதுரை இருந்த காலம் நாயக்கர் ஆட்சிக் காலமே.
நாயக்கர் கால மதுரையின் வரலாற்றை விவரித்து எழுத்தாளரும் பேராசிரியருமான அருணன் இந்த நூலை எழுதியுள்ளார்.
ஆர்.சத்தியநாத அய்யர் ‘மதுரை நாயக்கர் வரலாறு’, நெல்சனின் ‘மதுரை நாட்டுக் கையேடு’ ஆகிய இரண்டு நூல்களும் ஏற்கெனவே வந்திருக்கின்றன.