

பாரதியாரின் மனைவி செல்லம்மாள், மகள் சகுந்தலா, இரட்டையர் எனப் பிறர் குறிப்பிடுமளவுக்கு அவருடன் நெருங்கிப் பழகிய வ.உ.சிதம்பரனார், பாரதியாரோடு வெவ்வேறு காலக்கட்டங்களில் பயணித்த நண்பர்கள் எனப் பல தரப்புகளால் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு சாத்தியமாகியுள்ளது.
பாரதி குறித்த உயிரோட்டமான ஓர் அகச்சித்திரம் வாசகர்களிடம் உண்டு. இந்த நிலையிலும் அவரைக் குறித்த தவறான செய்திகள் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன.