

ஓடியாடும் சிறுவர்கள் முதல் தங்கள் அனுபவத்தால் வாழ்க்கைப் பாடம் கற்றுத்தரும் மூத்தோர் வரை அனைவருக்குமான இதழாக இருப்பது இதன் சிறப்பம்சம். 25 பிரபல ஆளுமைகளின் படைப்புகளுடன் கருத்துக்கு விருந்தளிக்கும் வகையில் கச்சிதமான வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது.
வாசகர்களின் வாசிப்பு ஆர்வத்துக்குத் தீனிபோடும் வகையில் 5 பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், 6 கவிஞர்களின் கவிதைகள், எழுத்தாளர் - கலை விமர்சகர் இந்திரனின் நேர்காணல், கரிசல் இலக்கிய மேதைகள் குறித்த தொகுப்பு போன்றவை சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன.