இரண்டாயிரம் ஆண்​டுக் கவிதைகளின் வரலாறு | நூல் வெளி

இரண்டாயிரம் ஆண்​டுக் கவிதைகளின் வரலாறு | நூல் வெளி
Updated on
2 min read

நவீனத் தமிழ்க் கவிஞர்​களுள் ஞானக்​கூத்​தன் மிக முக்​கிய​மானவர். நவீனக் கவிதைகளில் எதிர்ப்​புக் கவிதைகள் என்ற மரபை வளர்த்​தெடுத்​த​தில் இவருக்​குக் குறிப்​பிடத்​தக்க இடமிருக்​கிறது. தொல்​காப்​பி​யம், சங்க இலக்​கி​யம், பக்தி இலக்​கி​யம், காப்​பி​யங்​கள், சிற்​றிலக்​கி​யங்​கள், தனிப்​பாடல்​கள் என மரபிலக்​கி​யத்​தின் அனைத்து வகைமை​களி​லும் ஆழ்ந்த புலமை​யுடைய​வர்.

மரபிலக்​கி​யங்​களின் போதாமை​களை எதிர்ப்​புக் கவிதைகளாக எழு​தி​ய​வர். மரபின் வேரிலிருந்து தனக்​கான மொழியைத் தரு​வித்​துக் கொண்​ட​வர். மொழி​யின் அரசி​யலைக் கவிதைகளாக எழு​தி​ய​வர். மரபை​யும் நவீனத்​து​வத்​தை​யும் இணைத்​துத் தனக்​கென ஒரு கவிதை மரபைக் கண்​டு​பிடித்​தவர். ஞானக்​கூத்​தன் எழு​திய கவிதைகளை​விட அவர் கவிதை சார்ந்து எழு​திய கட்​டுரைகள் மிக முக்​கிய​மானவை.

அவர் எழு​திய கட்​டுரைகளும் கடுமை​யான விமர்​சனங்​களை முன்​வைக்​கின்​றன. கட்​டுரைக்​குள்​ளும் தம் கவிதை அரசி​யலைத் தீவிர​மாக வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார்.

கவிஞர் நா.​காம​ராசனின் ‘சூரிய​காந்​தி’, ‘கறுப்பு மலர்​கள்’ ஆகிய இரு தொகுப்​புக்​கும் 1971இல் ‘கசடத​பற’ இதழில் ஒரு சிறிய கட்​டுரை எழு​தி​யிருக்​கிறார். அதில், ‘சோசலிசக் கவிஞரின் எழுத்​துக்​களில் சோசலிச​மும் இல்​லை, கவிதை​யும் இல்​லை’ என்று கட்​டுரையை முடித்​திருக்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in