​காந்தியம்: எளிய நினைவு கூர்தல்

​காந்தியம்: எளிய நினைவு கூர்தல்
Updated on
1 min read

ம​காத்மா காந்​தி​யின் எழுத்​துக்​களும் அவரைப் பற்​றிய எழுத்​துக்​களும் தொடர்ந்து வெளிவந்த வண்​ணமே உள்​ளன. காந்தி ஓர் பேராளுமை என்​ப​தை​யும் கடந்து ஓர் அடை​யாள​மாக​வும், கருத்​தி​ய​லாக​வும் அவரை அணுகு​வது அதி​கரித்​துள்​ளது. அந்த வகை​யில் பேராசிரியர் கோ. விஜய​ராமலிங்​கம் எழு​தி​யுள்ள காந்​தி​யத் தடம் எனும் நூல் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக உள்​ளது.

இந்​நூலில் பதி​னான்கு கட்​டுரைகள் இடம்​பெற்​றுள்​ளன. அதில் பதி​மூன்று கட்​டுரைகள் வரலாற்​றில் காந்​தி​யை​யும் அவர்​தம் கருத்​துக்​களை​யும் விவா​திக்​கும் புள்​ளி​களாக அமைந்​துள்​ளன.

குறிப்​பாக காந்​தி​யும் அம்​பேத்​கரும், காந்​தி​யும் பகத்​சிங்​கும், காந்​தி​யும் நேதாஜி​யும், காந்​தி​யும் வ.உ.சி​யும், காந்​தி​யும் பெரி​யாரும் ஆகிய கட்​டுரைகள் காந்​திக்​கும் அவர் காலத்​தில் இந்​திய விடு​தலைக்​களத்​தில் நின்ற பிற ஆளு​மை​களுக்​கு​மான தொடர்​புறவு​களை நுட்​ப​மாக விளக்க முயல்​கின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in