

காந்தியைப் பற்றியும் காந்தியின் கொள்கைகளை மறுத்தும் ஆதரித்தும் விமர்சன நோக்கில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வந்துவிட்டன. இன்னும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வரும் அளவுக்குத் தகுதியானவர் காந்தி.
‘சத்திய சோதனை’ என்கிற பெயரில் காந்தி எழுதிய சுயசரிதை, அவரின் 52 ஆண்டுகால அனுபவங்களை மட்டுமே சொல்கிறது. ஒட்டுமொத்த காந்தியின் வாழ்க்கையைப் பிறர்தான் எழுதியிருக்கிறார்கள். அப்படிச் சுருக்கமாகவும் எளிய தமிழிலும் எழுதப்பட்ட நூல்களுள் ஒன்று இது.