விளிம்புநிலை அரசியல் கட்டுரைகள் | நூல் வெளி

விளிம்புநிலை அரசியல் கட்டுரைகள் | நூல் வெளி
Updated on: 
1 min read

மரபிலக்​கியம், நவீன இலக்​கியம், இயக்க அரசியல் என மூன்று பகுதி​களாகப் பிரிக்​கப்​பட்ட முப்​பத்​தெட்​டுக் கட்​டுரைகள் இந்​நூலுக்​குள் உள்​ளன. இந்​நூலை எழுதிய ப.பத்​மினி ஒரு தமிழ்ப் பேராசி​ரியர். இவருக்​கென்று ஓர் அரசி​யல் பார்வை இருக்​கிறது.

அது பெண்​ணி​யம், தலித்​தி​யம் போன்ற விளிம்​புநிலை​யின் அரசி​யல் சார்ந்​த​தாக இருக்​கிறது. அவர் சங்க இலக்​கியம் குறித்து எழுதினாலும் நவீன இலக்​கியம் குறித்து எழுதினாலும் இந்த இரண்டு பார்​வை​களும் மிக வலு​வாக வெளிப்​பட்​டிருப்​பதை நூல் முழுக்​கப் பார்க்க முடி​கிறது.

சங்க இலக்​கியத்​தின்​மீது இவருக்​குச் சில போதாமை​கள் இருக்​கின்​றன. அதனை மீள் வாசிப்​புச் செய்​கிறார். அதற்கு நவீன இலக்​கியக் கருதுகோள்​கள் துணை புரிந்​திருக்​கின்​றன. குறிப்​பாகச் சங்​கப் பெண்​க​விஞர்​கள் குறித்து எழுதப்​பட்​டுள்ள கட்​டுரைகள் புதிய வாசிப்​பு​களைத் திறந்​து​விடு​கின்​றன.

Loading content, please wait...

X