

சே.பிருந்தா 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறார். 1999இல் ‘மழை பற்றிய பகிர்தல்கள்’, 2009இல் ‘வீடு முழுக்க வானம்’, 2014இல் ‘மகளுக்குச் சொன்ன கதை’, 2022இல் ‘நீயுறை மனது’ ஆகிய தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இவை.
மனதில் தோன்றும் ஒளிக்கீற்றே கவிதைக்கு போனதுமானது. உதாரணம், வீசும் காற்றில்/ வீடே ஆடுகிறது/ விளக்குச் சுடருடன். சுவரின் யதார்த்தத்தோடு சுடரின் பிரமாண்டமான பிம்பம் ஆடியபடியே விழ, காற்றில் சுடர் ஆடி வீடே ஆடுவது போன்று தோன்றுகிறது.
ஒளிக்கீற்று போதுமானதல்ல.. கொஞ்சம்போல மெனக்கெட வேண்டும் என்ற வகைமையிலும் நிறைய எழுதியுள்ளார். உதாரணம், திடும் எனக் காதில் விழுந்தது/ குயிலின் குயிலோசை/ பிரமையா நிஜமா என்று/ நிதானிக்கவும்/ நேரமில்லை/ மெலிதான ஒரு கூவல்/ இப்போது நினைக்கையில்/ கேவலாகத் தோன்றுகிறது/ என்ன செய்ய முடியும்/ என்னால்/ தினசரிப் பரபரப்பில்/ தேய்கிறது குயிலின் குரல்/ என்று எழுதிவிட்டு போவது தவிர என்று முடித்துள்ளார். எல்லாமும் சாதாரணமாகத் தோன்றக்கூடியதுதான்.