

காண்பவை எதனையும் குறுகுறு வென்ற கூர்மையான மொழியில் சொல்பவர் அசோக மித்திரன். 70, 80களில் வெளியான கட்டுரைகளில், பத்தி எழுத்துகளில், அதன் வீரியம் பொதிந்திருப்பதை இந்நூலில் காணமுடிகிறது.
அசோகமித்திரனை அறிந்த வாசகர்களுக்கு, அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழக முகாமில் அவர் பங்கேற்றது, ப்ராங்பர்ட் புத்தகக் காட்சி அனுபவம், செகந்திராபாத் வாழ்க்கை போன்றவை பலமுறை வாசித்தவை போலத் தோன்றக்கூடும். இந்நூலில் வெளியாகியுள்ள யாவும் பழைய தமிழ் இதழ்களிலிருந்து தேடியெடுத்து தொகுக்கப்பட்ட; இதுவரை நூலாக்கம் பெறாத தகவல்கள் ஆகும்.