

நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் கலைமகள் மாத இதழின் இந்த ஆண்டு தீபாவளி மலர், சிவபெருமான் பார்வதி தேவியுடன் அருள்பாலிக்கும் (ஓவியம்: வேதா) ஓவியத்துடன் வரவேற்கிறது. கலைமகள் தீபாவளி மலரும் சிறுகதைகளுக்குப் பெயர்போனது.
கிரைம் நாவல் எழுத்தாளரான ராஜேஷ்குமார் இதில் சிறுகதை எழுதியுள்ளார். சுபா, சேஷசாயி, இந்திரநீலன் சுரேஷ், ‘காலச்சக்கரம்’ நரசிம்மா உள்ளிட்டோரின் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.