

இயற்கையோடு மனிதனைவிட மிகச்சரியாக பொருந்தி வாழ்பவை மற்ற உயிரினங்கள்தான் என்கின்றன வலங்கைமான் நூர்தீன் கவிதைகள். மற்ற உயிரினங்களின் உணர்வுகள் சாதாரண கண்களுக்குப் புலப்படாததை, ‘நீளும் பசியின் நாவுகள்’ என்ற முதல் கவிதை சொல்கிறது.
ஆழிப்பேரலை, மாமழை, காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்கள், சுரண்டுபவர்களுக்கானவை எனச் சொல்லாமல் சொல்கிறது இக்கவிதை.