மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரலாறு | நூல் வெளி

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரலாறு | நூல் வெளி
Updated on
2 min read

இந்​தியா முழு​வதும் மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புப் பணி​கள் நடை​பெற்​று​ வரு​கின்​றன. அடுத்த ஆண்​டில் திட்​ட​மிடப்​பட்​டுள்ள இரண்​டாம் கட்​டத்

தகவல் சேகரிப்​பு, சாதி​வாரிக் கணக்​கெடுப்​பாக அமை​யும் எனத் தெரி​கிறது.

இச்​சூழலில், காலனிய காலத்​தில் தமிழ்​நிலத்​தில் எடுக்​கப்​பட்ட கணக்​கெடுப்​பு​கள் குறித்த விரி​வான ஆய்வு நூலொன்று தமிழில் வெளிவந்​திருப்​பது சிறப்​பானது.

டேனிஷ் தரங்​கம்​பாடி​யில் (1790-1834), பிரெஞ்சு புதுச்​சேரி மற்​றும் காரைக்​காலில் (1822-1825), ஆங்​கிலேய சென்னை மாகாணத்​தில் (1871-1941) எடுக்​கப்​பட்ட மக்​கள்​தொகை மற்​றும் சாதி​வாரிக் கணக்​கெடுப்​பு​களைப் பற்றிய ஜெயசீல ஸ்டீபனின் ஆங்​கில நூல், உடனுக்​குடன் தமிழில் மொழிபெயர்க்​கப்​பட்​டுள்​ளது.

பொது​வாக, மக்கள்தொகைக் கணக்​கெடுப்​பின் வரலாறு 1871இல் தொடங்​கி​னாலும், இந்​நூல் 1790ஆம் ஆண்​டிலேயே தரங்​கம்​பாடி​யில் முதல் புள்​ளி​ விவரங்​கள் எடுக்​கப்​பட்​டதை விவரிக்​கிறது.

மக்​கள்​தொகை, தொழில், வீடமைப்பு என மூன்று பிரிவு​களாக நடத்​தப்​பட்ட இக்​கணக்​கெடுப்​பில் அடிமை​முறை, சாதி, மதம், மொழி பற்​றிய தரவு​கள் பதி​வாகி​யுள்​ளன. மேலும், தரங்​கம்​பாடி​யில் 1702ஆம் ஆண்​டிலேயே சமூக அளவீடு​கள் நோக்​கில் வீடு​கள் குறித்த முதல் புள்​ளி​விவர ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in