

தம்மபதம் என்பது புத்த நெறிமுறைகளை எளிய பதங்களில் தரும் தத்துவமாகும். இவை பாலி மொழியில் இயற்றப்பட்டவை. புத்தரின் போதனைகள் யாவும் செவிவழியில் கேட்டு பிரதியாக்கம் செய்யப்பட்டவை. பின்னர் உலகின் பல மொழிகளுக்கும் பயணம் செய்தது தம்மபதம்.
அதற்கும் முன்னர், தமிழின் அறநூல்களில், பண்டைய தமிழ்க் காப்பியங்களில் பவுத்த அறவுரைகள் இடம்பெற்றுள்ளன என்பதை நாம் மறந்துவிடமுடியாது.
இந்நூலில், கவனம், மனம், மலர்கள், முட்டாள், ஞானி, முழுமை, ஆயிரம், உலகம் என்பன உள்ளிட்ட 26 தலைப்புகளில் மொத்தம் 423 தம்மபத வசனங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.