

குறளோவியம்
கலைஞர் மு.கருணாநிதி
அருணா வெளியீடு, விலை ரூ.990
தொடர்புக்கு: 044-26507131
வழக்கமான உரை நூலாக அல்லாமல் ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு கதையைச் சொல்லும் கலைஞர் மு.கருணாநிதி, குறளின் இனிமையையும் அதன் பொருளின் ஆழத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கருணாநிதிக்கு சிறப்பு சேர்க்கும்விதமாக அருணா பதிப்பகத்தார் நேர்த்தியாகக் கொண்டுவந்துள்ளனர்.
பொய்கள் பொய்களாய் இருப்பதில்லை
ராஜ்குமார்
சந்தியா பதிப்பகம், விலை: ரூ.150
தொடர்புக்கு : 044-24896979
கவித்துவமும் கற்பனையும் மட்டுமின்றி, நாம் பார்க்கும், பங்கேற்கும் அன்றாட வாழ்க்கையை, கவிதையில் சொல்வதற்கு உதாரணமாக அமைந்த நல்ல கவிதைகளின் தொகுப்பு.