

கங்கை-கடாரம் கொண்ட இராஜேந்திர சோழரின் காவியக் காதல்
அமுதன் என்ற தனசேகரன் மற்றும் வே.தபசுக்குமார்
மணிமேகலைப் பிரசுரம்
விலை: ரூ.325, தொடர்புக்கு: 9176451934
ராஜராஜ சோழனை விஞ்சிய சாதனைகளோடு ராஜேந்திர சோழன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடல் கடந்த படையெடுப்புகள், ஆன்மிக திருப்பணிகள், ஆட்சி நிர்வாகம், பெண்மையை மதிக்கும் இயல்பு என சரித்திரத்தின் பக்கங்களை புனைவெழுத்தில் தீட்டிக்காட்டிள்ளது இந்நாவல்.
நல்லவேளை, புத்தர் AI காலத்தில் இல்லை
தபசி, மௌவல் பதிப்பகம்
விலை: ரூ.300, தொடர்புக்கு: 9787709687
வாழ்வில் அன்றாடம் பார்ப்பவை எல்லாம் எப்படியோ கவிஞரின் மனதைத் தொட்டுவிட, அவை கவிதைகளாகவும் பிறந்துவிடுகின்றன. மழையில் தொடங்கி மிருகக் காட்சி சாலையில் பார்த்த புலி வரை மொத்தம் 212 கவிதைகள் சிக்கல்கள் ஏதுமற்று மிகவும் எளிமையாக உள்ளன.