சொந்தங்களைக் காத்துவரும் காருண்யம்

சொந்தங்களைக் காத்துவரும் காருண்யம்
Updated on
1 min read

நெல்லை வட்​டாரத்​தின் மேய்ச்​சல் வாழ்​வை​யும் தொன்ம தரிசனத்​தை​யும் பேசுகின்றன ஏக்​நாத் கதைகள். இது அவரது 4வது சிறுகதைத் தொகுப்​பு. இதில் 4 கதைகள் சென்​னைப் பெருநகரத்​தை​யும். 6 கதைகள் நெல்​லை​யை​யும் சார்ந்​தவை. கதைகளில் நெல்​லைமொழி மூச்​சுக்​காற்று போல உடன் வரு​கிறது.

‘கொட்​டு’, ‘ஏவல் சாமிகள்’, ‘உமை​யாள்’ போன்ற கதைகளில் குலதெய்வ வழி​பாடு உக்​கிர​மாய் வரு​கிறது. ‘கல் இருக்​கை’ ‘குமிழிகள் உமிழும் சுழல்’ போன்ற கதைகளில் உறவு​முறை​கள், நட்​பு​முறை​கள் ஆசு​வாசப்​படு​கின்​றன. ‘தலை​வன் கூற்​றெனக் கொள்க’ சிறுகதை​யில் சைலப்​பர் கோயில் தேர்த்​திரு​விழா ஒரு பின்​னணி​யாக வரு​கிறது.

பழைய காதலி வள்​ளி​நாயகியை அடிக்​கடி நினைத்​துக்​கொள்​ளும், திரு​மண​மான 50 வயது முத்​து​சாமி, தேர்த்​திரு​விழா​வில் ஒரு பெண்​ணைப் பார்த்​து, தனது இளவயதுக் காதலியென நம்​பு​கிறார். அப்​பெண்ணை பின்​தொடர்​கிறார். சம்​பிர​தாய​மான வடிவத்​தில் குறுக்​கிக் கொள்​ளாமல், சுதந்​திர வெளியை வைத்​திருக்​கிறது இச்​சிறுகதை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in