

தமிழ் நவீனச் சிறார் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் உதயசங்கர். நவீனச் சிறார் எழுத்தாளர் வரிசையில் முன்நிற்பவர். உதயசங்கரின் கதைகள் வழக்கமான சிறார் கதைகளிலிருந்து மாறுபட்டவை.
அன்பின் வலிமையையும், அன்பான உலகம் அமைவதில் குழந்தைகளின் முக்கியத்துவத்தையும் பற்றி ஆழமாகப் பதிவு செய்யும் விதத்தில், ‘கத்தரிக்காய்க் குள்ளனும் கழுகுமலைப் பூதமும்’ என்ற இந்நூலின் தலைப்புக் கதை அமைந்துள்ளது.