தனிமனித இருப்பின் தத்துவம்

தனிமனித இருப்பின் தத்துவம்
Updated on: 
1 min read

மனிதரின் வாழ்வு, சுதந்​திரம் மற்​றும் தனிப்​பட்ட தேடல்​களை ஆராய்​கிற தத்​துவ வடிவம்​தான் இருத்​தலியம். மனிதன் முதலில் பிறக்​கிறான், பின் தனது செயல்​பாடுகளின் ஊடே வாழ்​வின் அர்த்​தத்​தைத் தேடிக் கண்​டடைகிறான்.

இங்​ஙனம் மனித இருப்​புக்​கான காரணமும் அதற்​கான முக்​கியத்​து​வ​முமே இருத்​தலியக் கோட்​பாட்​டின் மூலநோக்கங்களாக விளங்​கு​கின்​றன. அந்த வகை​யில் இருத்​தலியத் தத்​து​வச் சாரங்​கள் எங்​ஙனம் புனைவாக்​கம் பெற்​றிருக்​கின்​றன என்​பனவற்றை விளக்​கக்​கூடிய அல்​புனைவு நூல்​தான் எழுத்​தாளர் சீமானம்​பலத்​தின் ‘இருத்​தலியம்: கோட்​பாடும் புனைவும்’.

இருத்​தலியம் சுயம்​புவாகத் தோன்​றி​ விட​வில்லை. மாறாக இதற்கு முன்​னும் பின்​னுமாய்த் தொடர்​புடைய பல சிந்​தனைப் போக்​கு​களும் மரபு​களும் உள்​ளன என்​ப​தனைச் சுட்​டிக்​காட்டி, இருத்​தலியம் குறித்த விளக்​கங்​கள், கீர்க்​கெகார்ட், நீட்சே, சார்த்​தர் முதலிய இருத்​தலிய​லா​ளர்​களின் வரையறைகள் ஆகிய​வற்றை எடுத்​துக்​காட்​டுவ​தாய் ‘இருத்​தலியமும் இருத்​தலிய​லா​ளர்​களும்’ என்​கிற முதல் கட்​டுரை அமைந்​திருக்​கிறது.

Loading content, please wait...

X