

ஓர் இலக்கியத்தின் பதிப்பு வரலாற்றினை இவ்வளவு விரிவாகச் சொல்ல முடியுமா என்ற வியப்பை இந்த நூல் ஏற்படுத்துகின்றது. சங்க இலக்கியப் பத்துப்பாட்டினுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் நூல் நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையாகும்.
இதுவே, பன்னிரு சைவத் திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையுள்ளும் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதனைத் தெய்வப்பனுவல் என்பதும் வழக்கு. இப்பனுவலின் பதிப்பு வரலாற்றினை ஆய்வுநிலையில் இந்நூல் கூறுகிறது.