

மணல்வீடு ஏப்ரல், மே, ஜூன் 2026 இதழில், ‘தமிழக அரசியலில் கருத்தியலும், பின்னைய கருத்தியலும்’ கட்டுரையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றத்தின் பின்னணியைக் கோட்பாட்டுத் தளத்தில் விரிவாக அணுகியிருக்கிறார் ஜமாலன்.
கிட்டத்தட்ட இதே பொருண்மையில், விஜய் ஆட்சியமைத்ததற்கும் திரைப்படங்கள் வழி அவர் கட்டமைத்த பிம்பங்களுக்கும் உள்ள இணைப்பைச் சுட்டிக்காட்டியிருக்கிறது மிஹாத் எழுதிய கட்டுரை.
அர்ஜென்டீனாவைச் சேர்ந்த கவிஞர் ராபர்டோ ஹூவாரோஸ் பற்றிய அறிமுகத்தோடு, அவரது கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார் பிரம்மராஜன்.