தோழிகளே கேளுங்கள்

தோழிகளே கேளுங்கள்
Updated on: 
1 min read

இன்​றைய காலத்​தில் பெண்​களைப் பற்​றி​யும் அவர்​களுக்கு நடக்​கக்​கூடிய நிகழ்​வு​களைப் பற்​றி​யும் எழுத நிறைய பெண் எழுத்​தாளர்​கள் இருக்​கிறார்​கள்.

அவ்​வகை​யில், எழுத்​தாளர் ஏ.சாந்தி பிரபு தின​மும் பெண்​களுக்கு நடக்​கக்​கூடிய நிகழ்​வு​களைக் கேட்​டோ, படித்தோ எழு​தாமல் அவரது கண்​களால் கண்​டதை ஆராய்ந்து ‘கவனமா படிங்க ப்ளீஸ்’ என்ற தலைப்​பில் 31 கட்​டுரைகள் அடங்​கிய நூலை வெளி​யிட்​டுள்​ளார்.

இந்​தப் புத்​தகத்​தின் தலைப்பே ஒரு வேண்​டு​கோளை வாசகர்​களிடம் முன் வைக்​கிறது. நூலில் இடம்​பெற்​றுள்ள ஒவ்​வொரு கட்​டுரை​யும் ஏதேனும் சாதித்த பெண்​களைப் பற்​றிப் பேசுகிறது.

உடலில் ஏதேனும் குறை​பாடு​கள் இருந்​தா​லும் பெண்​கள் சாதித்​துக்​கொண்டு தானே இருக்​கிறார்​கள்; ஆனால், ஆணா​திக்​கம் ஏன் அதை ஏற்க மறுக்​கிறது என்ற கேள்​வியை முன்வைக்​கிறது இந்​நூல்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in