

இலக்கியத்தில் பரிசோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கவிஞரும் ஆய்வாளருமான முபீன் சாதிகாவின் மாய யதார்த்தவாத நாவல் ‘சித்ரபவுரி’ பூமிக்கடியிலான ஒரு புதிய நகரத்தையே நவீன சித்திரமாக தீட்டிக் காட்டியுள்ளது.
மயன், ஐ.பி.எஸ். தேர்ச்சிபெற்ற புலனாய்வுத்துறை அதிகாரி. ஒரு கொலை தொடர்பாக துறவி ஒருவரை விசாரிக்கிறான். விசாரணை மோதலாகிவிட, மயன் துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பிக்க நினைக்கிறான். ஒரு பள்ளத்தில் குதித்துப் பதுங்குகிறான். அதைத் தொடர்ந்து, பூமிக்கடியிலான நகரத்திற்குள் அவன் பிரவேசிக்க நேர்கிறது.
நிறைய பேர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். உணவு விடுதி, கேளிக்கை நிகழ்வுகள், கணினிப் பயன்பாடுகளும் இருக்கின்றன. குடும்ப அமைப்பு இல்லை. வேலையுமில்லை; கட்டுப்பாடும் இல்லை.