

இயல்பு என்று சமூகம் கட்டமைத்திருக்கும் எந்தத் தன்மைகளுக்குள்ளும் இல்லாத ஓர் எளிய மனிதன், சக மனிதர்களாலும் அரசு, அதிகாரம் என்ற நிறுவனங்களாலும் எவ்வாறு நடத்தப்படுவான், அவன் இத்தகைய கட்டமைப்புகளை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளான் என்பவற்றை மிகச் சிறப்பான புனைவாக உருவாக்கியிருக்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜே.எம்.கோட்ஸி.
‘அவலட்சணமான’ முகம், வளர்ச்சி குன்றிய மனநிலை, சக மனிதர்களிடம் இருந்து ஒதுங்கிய வாழ்க்கை, வறுமை, சரியான வேலைவாய்ப்பு இன்மை. இதுவே மைக்கேலின் நிலை.
‘சமூக மனிதர்களோடு’ பழகுவதை விட இயற்கையோடு, தன்னையொத்த நபர்களோடு இருப்பதையே விரும்புகிறான். பெரிய கனவுகளோ, லட்சியங்களோ இல்லாத அவனை இந்தச் சமூகம் எவ்வாறெல்லாம் அணுகுகிறது, பந்தாடுகிறது, அவன் இந்த உலக வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறான், எதை அடைய விரும்புகிறான் என்பதே இந்நூல்.